முகப்பு
ஐபிஎல்

சதம் விளாசிய மிட்செல் மார்ஷ்; குஜராத் டைட்டன்ஸுக்கு 236 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 2 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 22 மே, 2025 at 9:39 PM
மிட்செல் மார்ஷ் - படம் | AP
பகிர்:
Updated On : 22 மே, 2025 at 9:29 PM

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 2 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் விளையாடியது.

சதம் விளாசிய மிட்செல் மார்ஷ்

முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் அய்டன் மார்க்ரம் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், மார்க்ரம் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

Updated On : 22 மே, 2025 at 9:36 PM

அதன் பின், மிட்செல் மார்ஷுடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியில் மிரட்டினர். இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் குஜராத் டைட்டன்ஸ் அணியில் பந்துவீச்சாளர்கள் திணறினர். அபாரமாக விளையாடிய மிட்செல் மார்ஷ் சதம் விளாசி அசத்தினார். அவர் 64 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும்.

மறுமுனையில் அதிரடி காட்டிய நிக்கோலஸ் பூரன் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ரிஷப் பந்த் 6 பந்துகளில் 16 ரன்கள் (2 சிக்ஸர்கள்) எடுத்து களத்தில் இருந்தார்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் அர்ஷத் கான் மற்றும் சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

Updated On : 22 மே, 2025 at 9:36 PM

236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.