FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

டெவால்ட் பிரேவிஸ், டெவான் கான்வே அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 231 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 25 மே 2025, 5:55 pm IST
டெவால்ட் பிரேவிஸ் - படம் | AP
பகிர்:

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

டெவால்ட் பிரேவிஸ், டெவான் கான்வே அசத்தல்

முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே மற்றும் டெவான் கான்வே அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். அர்ஷத் கான் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் ஆயுஷ் மாத்ரே 28 ரன்கள் விளாசி அசத்தினார்.

இருப்பினும், அவர் 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, டெவான் கான்வேவுடன் உர்வில் படேல் ஜோடி சேர்ந்தார்.

இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. அதிரடியாக விளையாடிய உர்வில் படேல் 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஷிவம் துபே 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின், கான்வே மற்றும் டெவால்ட் பிரேவிஸ் ஜோடி சேர்ந்தனர். பிரேவிஸ் களமிறங்கியது முதலே அதிரடியில் மிரட்டினார். அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி விளையாடிய டெவான் கான்வே 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய டெவால்ட் பிரேவிஸும் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 23 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஜடேஜா 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சாய் கிஷோர், ரஷித் கான் மற்றும் ஷாருக்கான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments