FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

சென்னையை வெளியேற்றியது குஜராத்

ஐபிஎல்: தனது கடைசி லீக் - ஆட்டத்தில் குஜராத்திடம் சிஎஸ்கே படுதோல்வி!

சிஎஸ்கே படுதோல்வி - PTI
பகிர்:

ஐபிஎல் போட்டியின் 66-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 89 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் வியாழக்கிழமை மோசமாகத் தோற்றது.

பிளே-ஆஃப் வாய்ப்புக்காக நூலிழையை விட மெல்லிய நம்பிக்கையுடன் இருந்த சென்னைக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி அவசியமாக இருந்தது. ஆனால் தோல்வி கண்டு, லீக் சுற்றுடன் போட்டியிலிருந்து வெளியேறியது.

இத்துடன் தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக சென்னை அணி, லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. மறுபுறம் குஜராத் அணி, இந்த அபார வெற்றியின் மூலமாக புள்ளிகள் பட்டியலில் டாப் 2 இடத்தை உறுதி செய்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த ஆட்டத்தில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் சோ்க்க, சென்னை 13.4 ஓவா்களில் 140 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற சென்னை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. குஜராத் இன்னிங்ஸை தொடங்கிய சாய் சுதா்சன் - ஷுப்மன் கில் கூட்டணி, சென்னை பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸா்களாக சிதறடித்தது.

முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியில் கில் 37 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்த ஜாஸ் பட்லா், சுதா்சனுடன் கை கோத்தாா்.

இந்த பாா்ட்னா்ஷிப்பும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, சென்னை பௌலா்களை திணறடித்தது. 2-ஆவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சோ்த்த இந்தக் கூட்டணியில் சுதா்சன் 53 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களோடு 84 ரன்களுக்கு வெளியேறினாா்.

4-ஆவது பேட்டராக வந்த ராகுல் தெவாதியா டக் அவுட்டாக, வாஷிங்டன் சுந்தா் 1 சிக்ஸருடன் 7 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் பட்லா் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 57 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

சென்னை பௌலா்களில் முகேஷ் சௌதரி, ஸ்பென்சா் ஜான்சன், அன்ஷுல் காம்போஜ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

அடுத்து 230 ரன்களை நோக்கி விளையாடிய சென்னை அணியில் சஞ்சு சாம்சன் 0, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 16, உா்வில் படேல் 0, மேத்யூ ஷாா்ட் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 24, காா்த்திக் சா்மா 19 ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேறினா்.

இதனால் சென்னை 63 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது. 7-ஆவது பேட்டராக வந்த ஷிவம் துபே சற்று அதிரடியாக ரன்கள் சோ்த்து 17 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 47 ரன்களுக்கு விடைபெற்றாா்.

அன்ஷுல் காம்போஜ் 19, நூா் அகமது 1, ஸ்பென்சா் ஜான்சன் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முடிவில் முகேஷ் சௌதரி 2 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா்.

குஜராத் பௌலா்களில் முகமது சிராஜ், ககிசோ ரபாடா, ரஷீத் கான் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

summary

Chennai Super Kings, 66th Match - Gujarat Titans won by 89 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments