ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பு பிரகாசமானது...
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி வெற்றியை ருசித்தது.
லக்னௌவில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களமிறங்கிய லக்னௌ அணியில் தொடக்க வீரர் ஜோஷ் இங்க்லிஷ் 72 ரன்கள் குவித்தார்.
நடுவரிசையில் களமிறங்கிய ஆயுஷ் பதோனி 18 பந்துகளில் 43 ரன்கள அதிரடியாக எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அடுத்து, 197 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்தது.
Advertisement
Advertisement
அந்த அணியில் தொடக்கவீரர் பிரியான்ஷ் ஆர்யா டக் அவுட் அதிர்ச்சியளித்த போதிலும், நடுவரிசையில் மட்டையைச் சுழற்றிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார்.
மற்றொரு தொடக்கவீரர் பிராப்சிம்ரன் சிங் நிலைத்து நின்று 69 ரன்கள் சேர்க்க, ஷ்ரேயாஸ் ஐயர் சதம் கடந்தார். அவர் 51 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார்.
இறுதியில், 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் திரட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்ஸ் லீக் சுற்று முடிவில் 7-இல் வெற்றி 6-இல் தோல்வியடைந்து 1 ஆட்டம் கைவிடப்பட்டதால் 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-ஆவது இடத்தில் உள்ளது.
Lucknow Super Giants vs Punjab Kings, 68th Match, Indian Premier League 2026 - Punjab Kings won by 7 wkts
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.