டெஸ்ட்: 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய பாண்டியா (விடியோ)
ஹார்திக் பாண்டியா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன்களை மட்டுமே எடுத்தது.
டிரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சரிந்தது. ஹார்திக் பாண்டியா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன்களை மட்டுமே எடுத்தது.
முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்பிறகு தன்னுடைய 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி, 31 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்திருந்தது. புஜாரா 33, கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.