யு.எஸ். ஓபன்: அரையிறுதியில் மோதும் வீரர்கள்!
யு.எஸ். ஓபன் போட்டியின் காலிறுதியில் மில்மேனைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார் ஜோகோவிச்.
யு.எஸ். ஓபன் போட்டியின் காலிறுதியில் மில்மேனைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார் ஜோகோவிச்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று இப்போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் ஜோகோவிச்சும் ஜான் மில்மேனும் மோதினார்கள். 5 முறை யு.எஸ். ஓபன் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை 4-வது சுற்றில் வீழ்த்தினார் ஆஸ்திரேலியாவின் மில்மேன். இதனால் இவர் பங்கேற்கும் காலிறுதி ஆட்டம் வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜோகோவிச் மில்மேனுக்கு வாய்ப்பு எதுவும் தராமல் 6-3, 6-4, 6-4 என நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். யு.எஸ். ஓபன் போட்டியில் 11-வது முறையாக அரையிறுதிச் சுற்றுக்குள் அவர் முன்னேறியுள்ளார்.
Advertisement
Advertisement
இதையடுத்து ஆடவர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றுக்கு நடால், டெல் பொட்ரோ, நிஷிகோரி, ஜோகோவிச் ஆகியோர் தகுதி பெற்றார்கள். நடால் - டெல் பொட்ரோ, ஜோகோவிச் - நிஷிகோரி என அரையுறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.