டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்குப் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
டி20 உலகக் கோப்பைப் போட்டியை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை விவரங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இந்த வார இறுதியில் தொடங்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை விவரங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கும் பரிசுத்தொகையாக ரூ. 12 கோடி வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 6 கோடி பரிசுத்தொகையும் அரையிறுதியில் தோற்கும் இரு அணிகளுக்கு ரூ. 3 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளன. டி20 உலகக் கோப்பைக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகை ரூ. 42 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.