FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தடை நீக்கம்

கடந்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியது இலங்கை அணி. 

Updated On : 8 ஜனவரி 2022, 12:31 pm IST
இலங்கை அணி (கோப்புப் படம்)
பகிர்:

கடந்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியது இலங்கை அணி. 

இலங்கை வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகிய மூவரும் கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. டர்ஹம் சிட்டி செண்டர் என்கிற பொது இடத்தில் மெண்டிஸும் டிக்வெல்லாவும் இருந்த விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. இருவர் கைகளிலும் முகக்கவசம் இருந்தாலும் இருவரும் அதை அணிந்திருக்கவில்லை. சிட்டி செண்டர் பகுதியில் காரில் சென்ற ஒருவர் அவர்களுக்குத் தெரியாமல் விடியோ எடுத்தார். இவர்களுடன் வெளியேறிய தனுஷ்கா அந்த விடியோவில் இடம்பெறவில்லை.

இந்த விடியோ வெளியான பிறகு மூன்று வீரர்களும் கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியது பற்றி விசாரணை நடைபெற்றது. இதில் மூவரும் பாதுகாப்பு வளையத்தை மீறி வெளியே சென்றதை ஒப்புக்கொண்டார்கள். ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் முதல் தேர்வாக இருக்கும் மூவரும் இலங்கை கிரிக்கெட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதால் மூவருக்கும் இடைக்காலத் தடை விதித்து இங்கிலாந்திலிருந்து வெளியேற்றியது இலங்கை கிரிக்கெட் வாரியம். மூவரும் விமானத்தில் இலங்கைக்குத் திரும்பினார்கள். பிறகு மூவரும் சர்வதேச ஆட்டங்களில் விளையாட ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனால் மூவரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கவில்லை.

Advertisement

Advertisement

இந்நிலையில் மூவருக்கும் விதிக்கப்பட்ட ஓர் ஆண்டு தண்டனையை ஆறு மாதங்களுக்குள் ரத்து செய்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். ஜனவரி 7 முதல்  நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகிய மூவரும் சர்வதேச ஆட்டங்களில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடற்தகுதியை நிரூபித்தால் மூவரும் அடுத்து வருகிற ஜிம்பாப்வே ஒருநாள் தொடரிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments