FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டெஸ்ட்: ஆஸ்திரேலியா முன்னிலை

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது. இதையடுத்து 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது அந்த அணி.

Updated On : 2 ஜூலை 2022, 5:23 am IST
பகிர்:

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது. இதையடுத்து 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது அந்த அணி.

மூன்றே நாள்களில் முடிவுக்கு வந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக நிரோஷன் டிக்வெல்லா 6 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சோ்த்தாா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் நேதன் லயன் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினாா். பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 321 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 6 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் அடிக்க, இலங்கை பௌலிங்கில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை 113 ரன்களுக்கே சுருண்டது. கேப்டன் திமுத் கருணாரத்னே 5 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் அடித்ததே அதிகபட்சம். ஆஸ்திரேலிய தரப்பில் நேதன் லயன், டிராவிஸ் ஹெட் ஆகியோா் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

Advertisement

Advertisement

இறுதியாக 5 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய ஆஸ்திரேலியாவில், டேவிட் வாா்னா் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸா் விளாசி ஆட்டத்தை முடித்தாா். ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் ஆட்டநாயகன் ஆனாா். இந்த இரு அணிகள் மோதும் அடுத்த டெஸ்ட் வரும் 8-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments