முகப்பு
செய்திகள்

ஆசியக் கோப்பை டி20: இலங்கை அணி அறிவிப்பு

ஆசியக் கோப்பை டி20 போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 20 ஆகஸ்ட் 2022, 12:02 pm IST
பகிர்:

ஆசியக் கோப்பை டி20 போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது.

2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Advertisement

Advertisement

இந்தியா, பாகிஸ்தான், தகுதிச்சுற்று அணி என மூன்று அணிகள் குரூப் ஏ பிரிவிலும் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதவுள்ளன. சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 11 அன்று துபையில் நடைபெறும் இறுதிச்சுற்றில் மோதுகின்றன. ஹார்ஜா, துபையில் நடைபெறும் அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரம் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன. 

ஆசியக் கோப்பை டி20 போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 20 பேர் கொண்ட அணியை தசுன் ஷனகா தலைமை தாங்குகிறார்.

இலங்கை அணி

தசுன் ஷனகா (கேப்டன்), தனுஷகா குணதிலகா, பதும் நிஸ்சங்கா, குசால் மெண்டிஸ், சரித் அசலங்கா, பனுகா, ஆஷன் பண்டாரா, தனஞ்ஜெயா டி சில்வா, வணிண்டு ஹசரங்கா, மகேஷ் தீக்‌ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா, துஷ்மந்தா சமீரா, பினுரா பெர்னாண்டோ, சமிகா கருணாரத்னே, தில்ஷன் மதுஷங்கா, மதீஷா பதிரனா, தினேஷ் சண்டிமல், நுவனின்டு பெர்னாண்டோ, கசுன் ரஜிதா. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments