முகப்பு
செய்திகள்

மெஸ்ஸியின் ஓய்வு முடிவில் மாற்றம்!

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணிக்காகத் தொடர்ந்து விளையாடவுள்ளதாக பிரபல வீரர் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

Updated On : 19 டிசம்பர் 2022, 12:39 pm IST
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணிக்காகத் தொடர்ந்து விளையாடவுள்ளதாக பிரபல வீரர் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. 

1978, 1986-க்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணி வென்ற 3-வது உலகக் கோப்பை இது. மெஸ்ஸி முதல்முறையாக உலகக் கோப்பையை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது. 1962-க்குப் பிறகு அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை வென்ற அணி என்கிற பெருமையைப் பெறுவதற்காக பிரான்ஸ் கடுமையாக முயன்றது. இறுதியில் பெனால்டியில் தோற்றுப் போனது. உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஹாட்ரிக் கோல்களை அடித்த 2-வது வீரர் என்கிற பெருமையை அடைந்தார் பிரான்ஸின் எம்பாப்பே. பரிசளிப்பு விழாவில் தங்கக் காலணி விருது எம்பாப்பேவுக்கு வழங்கப்பட்டது. போட்டியின் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வானார்.

Advertisement

Advertisement

இதுவே என்னுடைய கடைசி உலகக் கோப்பைப் போட்டி எனச் சில நாள்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்தார் மெஸ்ஸி. இதனால் உலகக் கோப்பைப் போட்டியுடன் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் சில வருடங்கள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடவுள்ளதாக மெஸ்ஸி அறிவித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

உலக சாம்பியனாக இன்னும் சில ஆட்டங்களில் விளையாட விரும்புகிறேன். என் வாழ்க்கையில் உலகக் கோப்பையைத் தவிர எல்லாப் போட்டிகளையும் வென்றது என் அதிர்ஷ்டம். இந்த உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனாவுக்கு எடுத்துச் சென்று அனைவர் முன்னிலையிலும் என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தப் போகிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments