FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

2024 டி20 உலகக் கோப்பை எந்த விதத்தில் நடைபெறும்?: ஐசிசி அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியின் வடிவம் குறித்து அறிவிப்பு...

Updated On : 22 நவம்பர் 2022, 1:08 pm IST
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியின் வடிவம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

2024 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கவுள்ளன (2022-ல் 12 அணிகள்). 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய 8 அணிகள் அடுத்த உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. 2022 டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் இரு பிரிவுகளிலும் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த உலகக் கோப்பை நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. அதன்படி குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. தகுதிச்சுற்றில் விளையாட வேண்டிய அவசியம் இல்லாமல் நெதர்லாந்து அணி நேரடியாக தகுதி பெற்றிருப்பது முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. போட்டியை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகளும் அமெரிக்காவும் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுகின்றன. இந்த 10 அணிகளுடன் ஐசிசி தரவரிசையில் மேலே உள்ள வங்கதேசமும் ஆப்கானிஸ்தானும் நேரடியாகத் தகுதி பெறுகின்றன.

12 அணிகள் இதுபோல நேரடியாகத் தேர்வாகிவிட்ட நிலையில் மீதமுள்ள 8 அணிகளும் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்வாகவுள்ளன. 2022 டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் விளையாடிய அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடி அதன் வழியாகவே உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெற முடியும். 

Advertisement

Advertisement

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டி எந்த விதத்தில் நடைபெறும் என்பது குறித்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

பங்கேற்கும் 20 அணிகளும் 4 குழுக்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் இடம்பெறும். அடுத்ததாக இந்தக் குழுவிலிருந்தும் 2 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும். சூப்பர் 8 சுற்றில் 4 அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்படும். சூப்பர் 8 சுற்றிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments