FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கங்குலியின் அடுத்த டார்கெட் என்ன? 

பெங்கால் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

6 பிப்ரவரி 2024, 6:20 pm IST
பகிர்:

பெங்கால் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

2019 அக்டோபரில் பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியும் செயலாளராக ஜெய் ஷாவும் தேர்வானார்கள். சமீபத்தில் பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி கங்குலி, ஜெய் ஷா ஆகிய இருவரும் தங்களுடைய பதவிகளில் மேலும் மூன்று வருட காலம் பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்பட்டது.  எனினும் பிசிசிஐயின் தலைமைப் பொறுப்புகளில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. 

பிசிசிஐயில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலின் மூலம் தலைவர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி (67) தேர்வாகவுள்ளார். கங்குலியின் பிசிசிஐ தலைவர் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் பெங்கால் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, பெங்கால் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளேன்.

Advertisement

Advertisement

இதற்காக அக்டோபர் 22-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளேன். ஏற்கெனவே 5 ஆண்டுகள் பெங்கால் கிரிக்கெட் வாரிய பொறுப்பில் இருந்துள்ளேன். லோதா கமிட்டி விதிகளின்படி, மேலும் 4 ஆண்டுகள் பதவியில் தொடர முடியும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இதனிடையே கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட அதிகம் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments