முகப்பு
செய்திகள்

டபிள்யூடிசி தோல்விக்கு புஜாராதான் பலியாடா? : டெஸ்ட் தொடரில் புஜாரா இல்லாதது குறித்து கவாஸ்கர் ஆவேசம்! 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தோல்வியடைந்ததற்கு புஜாரா மட்டுமே காரணமா என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். 

Updated On : 24 ஜூன், 2023 at 10:41 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:42 AM

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியுற்றது. இந்திய பேட்டர்கள் சரியாக விளையாடாததே காரணம். இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டடது. இதில் புஜாரா நீக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரரும் முன்னாள் இந்திய அணி கேப்டனுமான சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து கவாஸ்கர் கூறியதாவது: 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி தோல்விக்கு காரணம் இந்திய பேட்டர்கள் சரியாக விளையாடாததே காரணம். ரஹானே தவிர மற்ற எந்த வீரரும் ஒழுங்காக விளையாடவில்லை. ஆனால் தற்போது புஜாராவை மட்டும் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கியுள்ளார்கள். அவரை தவிர மற்றவர்களை அணியில் தேர்வு செய்ததற்கான தகுதிகள் என்னென்ன? பேட்டர்கள் சரியாக விளையாடாமல் போனதற்கு புஜாராதான் பலியாடா? அவர் இந்திய கிரிக்கெட்டின் விசுவாசி.  

புஜாரா கவுண்டி கிரிக்கெட் விளையாடியுள்ளார். அதிகமாக டெஸ்ட் போட்டிகளையும் விளையாடியுள்ளார். வீரர்கள் 40 வயது வரைக்கும் விளையாடலாம். உடல்நிலை சரியாக இருக்கும்வரை விளையாடுவது தவறில்லை. ரன்கள் அடிக்கும்வரை விக்கெட்டுகள் எடுக்கும்வரை வயது காரணமில்லை. எந்த சமூக வலைதளத்திலும் அவர் இல்லாதது குறித்து சத்தம் எழவில்லை. ஏனெனில் அவருக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இல்லை. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.