FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஜப்பான் மாஸ்டர்ஸ் போட்டியில் பிரணாய் தோல்வி!

ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் பிரணாய் போராடி தோல்வியடைந்தார்.

Updated On : 16 நவம்பர் 2023, 4:44 pm IST
பகிர்:

ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் தோல்வியடைந்து வெளியேறினார் இந்திய வீரர் பிரணாய்.

ஜப்பான் மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பாட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரணாய், சீன தைபேயின் சௌ தியென் சென்னுடன் வியாழக்கிழமை நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறினார்.

முன்னதாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரணாய், முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு இந்தப் போட்டிக்கு திரும்பினார். உலகின் 12ம் நிலை வீரரான தியென் சென்னுடனான 73 நிமிட போட்டியில் 21-19, 16-21, 19-21 என்ற கணக்கில் தோற்றார்.

Advertisement

Advertisement

உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரணாய் முதல் சுற்றில் நிதானமாக விளையாடி 4-0 என முன்னிலை பெற்றார். மேலும் இடைவேளையின் போதும் 11-8 என முன்னிலையில் இருந்தார்.

இருப்பினும், சென் பிரணாய்க்கு நெருக்கமாக வர கடுமையாக முயற்சி செய்தார். அடுத்த ஆட்டத்தில் 5-0 என சென் முன்னிலை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து பிரணாய் போராடி 10-10 என்ற கணக்கில் புள்ளிகளை சமன் செய்தாலும், சென் விரைவாக நான்கு புள்ளிகளை கூடுதலாக எடுத்து இடைவெளியை உருவாக்கினார், அதை பிரணாயால் முறியடிக்க முடியவில்லை.

சீன தைபே வீரர் சென் ஒரு கட்டத்தில் 12-4 என முன்னிலை வகித்தார். இதையடுத்து மிக நிதானமாக விளையாடிய பிரணாய் புள்ளிகளை சீராக உயர்த்தி 19-19 என்று சமநிலைக்கு வந்தார். 

இருந்தபோதிலும், சென் கூடுதலாக இரண்டு புள்ளிகளைக் கைப்பற்றி 21-19 என்ற கணக்கில் இந்திய வீரர் பிரணாயை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments