FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

2-வது டெஸ்ட்: நியூசிலாந்து 8 ரன்கள் முன்னிலை; இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும் வங்கதேசம்!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Updated On : 8 டிசம்பர் 2023, 3:40 pm IST
பகிர்:

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் (டிசம்பர் 6) இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியின் முதல் நாளில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முஸ்தபிசூர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார்.

கிளன் பிளிப்ஸ் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இதனையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 55 ரன்களுக்கு 5  விக்கெட்டை  இழந்திருந்தது. வங்கதேசம் தரப்பில் மெஹிதி ஹாசன் 3 விக்கெட்டுகளையும், தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். 

இந்த நிலையில், நேற்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

வங்கதேசம் நியூசிலாந்தைக் காட்டிலும் 117 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நியூசிலாந்து வீரர் கிளன் பிளிப்ஸ் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். அவர் 72 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், நியூசிலாந்து வங்கதேசத்தைக் காட்டிலும் 8 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம் 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.  போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டத்தைத் தொடர்வதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments