ரஞ்சி கோப்பை: காலிறுதியில் சௌராஷ்டிரா அசத்தல் வெற்றி!
பஞ்சாபிற்கு எதிரான கடைசிநாள் ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரா அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தேர்வானது.
ரஞ்சி கோப்பை அரையிறுதிக்கு நடப்பு சாம்பியன் மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், கா்நாடக அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் பஞ்சாபை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழத்தி சௌராஷ்டிரா அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது.
காலிறுதியில் பஞ்சாப்-சௌராஷ்டிர அணிகள் ஆடின. கடைசி நாளான சனிக்கிழமை பஞ்சாப் அணி வெற்றி பெற 200 ரன்கள் தேவைப்படுகிறது. அதே நேரம் சௌராஷ்டிர அணிக்கு 8 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில் உள்ளது. ஸ்கோா்: சௌராஷ்டிரா 303, 379,
இதையும் படிக்க: ஒரே ஓவரில் 26 ரன்கள் அடித்த பொலார்ட்! (விடியோ)
Advertisement
Advertisement
பஞ்சாப் முதல் இன்னிங்ஸ் 431, இரண்டாவது இன்னிங்ஸ் 180.பஞ்சாப் அணியில் கேப்டன் மந்தீப் சிங் விக்கெட் இழந்ததும் அணி நிலைக்குழைந்த்து. அவ்ர அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.
சௌராஷ்டிரா அணியில் பார்த் புட் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை எடுத்தார். தர்மேந்திர சிங் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், யுவ்ராஜ்சிங் தோதியா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.