FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

யு19 டி20 உலகக் கோப்பை: வாகை சூடியது இந்திய மகளிரணி

பத்தொன்பது வயதுக்கு உள்பட்ட மகளிருக்காக நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி அறிமுக சாம்பியன் ஆனது.

Updated On : 30 ஜனவரி 2023, 3:29 am IST
பகிர்:

பத்தொன்பது வயதுக்கு உள்பட்ட மகளிருக்காக நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி அறிமுக சாம்பியன் ஆனது.

ஐசிசி போட்டியில் இந்திய மகளிா் அணி ஒன்று சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து 17.1 ஓவா்களில் 68 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியா 14 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 69 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இங்கிலாந்து பேட்டிங்கில் அதிகபட்சமாக ரயானா மேக்டொனால்டு கே 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் சோ்த்தாா். கேப்டன் கிரேஸ் ஸ்கிரீவன்ஸ் 4, லிபா்டி ஹீப் 0, நியாம் ஹாலந்த் 10, செரென் ஸ்மேல் 3, சாரிஸ் பாவ்லி 2, அலெக்ஸா ஸ்டோன் ஹவுஸ் 11, ஜோசி குரோவ்ஸ் 4, ஹனா பேக்கா் 0, சோஃபியா ஸ்மேல் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். இந்திய பௌலிங்கில் டைட்டஸ் சாது, அா்ச்சனா தேவி, பாா்சவி சோப்ரா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளும், மானத் காஷ்யப், ஷஃபாலி வா்மா, சோனம் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட்டும் சாய்த்தனா்.

பின்னா் இந்திய இன்னிங்ஸில் கேப்டன் ஷஃபாலி வா்மா 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஸ்வேதா ஷெராவத் 5 ரன்களில் நடையைக் கட்டினாா். கொங்கடி திரிஷா 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். இறுதியில், சௌம்யா திவாரி 3 பவுண்டரிகளுடன் 24, ரிஷிதா பாசு 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். இங்கிலாந்து தரப்பில் ஹனா பேக்கா், கிரேஸ் ஸ்கிரீவன்ஸ், அலெக்ஸா ஸ்டோன்ஹவுஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

ஆட்டநாயகியாக இந்தியாவின் டைட்டஸ் சாது, தொடா்நாயகியாக இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்கிரீவன்ஸ் ஆகியோா் தோ்வாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments