உலகக் கோப்பை: நெதர்லாந்துக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!
உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான இன்றையப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான இன்றையப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
உலகக் கோப்பைத் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: ஆசிய விளையாட்டு கிரிக்கெட்: இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்லுமா?
Advertisement
Advertisement
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபகர் சமான் மற்றும் இமாம் உல் ஹக் களமிறங்கினர். ஃபகர் சமான் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இமாம் உல் ஹக் 15 ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து, முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். சௌத் ஷகீல் 68 ரன்கள் (9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), முகமது ரிஸ்வான் 68 ரன்கள் (8 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் இப்திகார் அகமது (9 ரன்கள்), ஷதாப் கான் (32 ரன்கள்), முகமது நவாஸ் (39 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 49 ஓவர்களின் முடிவில் 286 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதையும் படிக்க: உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பாரா கில்?
நெதர்லாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பாஸ்-டி-லீட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். காலின் அக்கர்மேன் 2 விக்கெட்டுகளையும், ஆர்யன் தத், லோகன் வான் பீக், , பால் வான் மீகேரன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி களமிறங்குகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.