விராட் கோலிக்கு சில்வர் பேட்டினை பரிசளித்த இலங்கை வீரர்!
இலங்கை உள்ளூர் கிரிக்கெட்டர் இந்திய வீரர் விராட் கோலிக்கு வெள்ளி (சில்வர்) பேட்டினை பரிசளித்துள்ளார்.
34 வயதாகும் விராட் கோலி 277 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12,902 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 46 சதங்கள், 65 அரைசதங்கள் அடங்கும். டெஸ்டில் 29 சதங்களும் 29 அரைசதங்களும் அடித்துள்ளார்.
சச்சினுக்குப் பிறகு அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் விராட் கோலி இருக்கிறார். எப்போதும் இளம் வீரர்களுடன் உரையாடல் நிகழ்த்துவதில் ஆர்வமுடையவர்.
இதையும் படிக்க: இந்தியாவை விட எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: பாபர் அசாம்
Advertisement
Advertisement
ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் தகுதிபெற்று இருக்கும் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் நாளை பலப்பரிட்சை செய்யவுள்ளது. இந்நிலையில் இலங்கையில் பயிற்சி எடுத்துவரும் இந்திய அணிக்கு இலங்கையில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பந்து வீசினர்.
இந்தப் பயிற்சிக்குப் பிறகு விராட் கோலி இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர்களிடம் பேசினார். அவர்களது சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.
இலங்கையின் இளம் வீரர் ஒருவர் விராட் கோலிக்கு வெள்ளி (சில்வர்) பேட்டினை அன்புப் பரிசாக அளித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.