யு-19 உலகக் கோப்பை: இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்?
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இன்றைய அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: இந்திய சுழற்பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் சிறப்பாக செயல்பட்டது எப்படி? மனம் திறந்த இங்கிலாந்து வீரர்!
Advertisement
Advertisement
பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அஸான் அவாய்ஷ் மற்றும் அராஃபாத் மின்ஹாஸ் தலா 52 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்டிரேக்கர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.