அறிவுசார் நக்சல் என்பதில் பெருமைப்படுகிறேன்: அரவிந்த் கேஜரிவால்
அறிவுசார் நக்சல் என்பதில் பெருமைப்படுவதாக தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
அறிவுசார் நக்சல் என்பதில் பெருமைப்படுவதாக தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
80-வது சுதந்திர நாள் அன்று தில்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “காடுகளில் ஆயுதம் ஏந்திய நக்சல்களை ஒழிப்பதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், நாட்டில் வன்முறை, அமைதியின்மையை ஏற்படுத்த ‘திமாகி நக்சல்கள்’ (அறிவுசார் அல்லது கருத்தியல் சார்ந்த நக்சல்கள்) வாய்ப்புகளைத் தேடுகின்றனர். அவர்கள் சமூகத்தைத் தவறான பாதையில் இழுத்துச் செல்ல விரும்புகின்றனர்” எனப் பேசியிருந்தார்.
பிரதமரின் ‘அறிவுசார் நக்சல்’ என்ற கருத்துக்கு எதிர்க்கட்சியினர் பலரும் விமர்சனங்களை வைத்தனர். இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், தன்னை ஒரு அறிவுசார் நக்சல் என அறிவிப்பதில் பெருமை கொள்வதாகக் குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் கருத்துப்படி, துணிந்து கேள்வி கேட்பவர்களும், பாஜகவை கண்டு பயப்படாதவர்களுமே அறிவுசார் நக்சல்கள். பகத் சிங், அம்பேத்கர் போன்றோர் இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர்களும் பிரதமரின் பார்வையில் அறிவுசார் நக்சல்கள் என அழைக்கப்பட்டிருப்பர்.
ஊழல் இல்லாத நிர்வாக அமைப்பு, வடிகால் வசதிகள், சிறந்த மருத்துவமனைகள் என மேம்பட்ட வசதிகளை விரும்பும் மக்களை பிரதமர் நக்சல்கள் என்று அழைப்பார்.
நான் உண்மையான தேசபக்தன். எனவே மோடியின் பார்வையில் நான் ஒரு அறிவுசார் நக்சல். இந்தியாவுக்கு எதிராக யாரேனும் பேசினால், நான் அதனை முழுமையாக எதிர்ப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவரான ப. சிதம்பரம், பிரதமர் மோடி கருத்துகளை விமர்சித்து, "நான் ஒரு ’அறிவுசார் நக்சல்' என்பதில் பெருமை கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
Former Delhi Chief Minister Arvind Kejriwal stated that he takes pride in being an 'Dimagi Naxal'.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.