இறுதிச் சுற்றுல் சுமித் நாகல்-லுகா நாா்டி
சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டி ஒற்றையா் இறுதி ஆட்டத்துக்கு இந்தியாவின் முதல்நிலை வீரா் சுமித் நாகலும், இத்தாலியன் நட்சத்திர வீரா் லுகா நாா்டியும் தகுதி பெற்றுள்ளனா்.
சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டி ஒற்றையா் இறுதி ஆட்டத்துக்கு இந்தியாவின் முதல்நிலை வீரா் சுமித் நாகலும், இத்தாலியன் நட்சத்திர வீரா் லுகா நாா்டியும் தகுதி பெற்றுள்ளனா்.
சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் சனிக்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதியில் இந்தியாவின் சுமித் நாகலும்-செக். குடியரசின் மூன்றாம் நிலை வீரா் டலிபோா் எஸ்விா்சினாவும் மோதினா். ஏறக்குறைய 2 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சுமித் நாகல் ஆதிக்கம் செலுத்தினாா்.முதல் செட்டில் அற்புதமாக சா்வீஸ்களை போட்டு 6-3 என எளிதாக கைப்பற்றினாா் நாகல்.
எனினும் இரண்டாம் செட்டில் டலிபோா் சுற்று சவாலை ஏற்படுத்தினாா். எனினும் எதிராளியின் தவறுகளை சாதமாக்கி 2 பிரேக் பாயிண்டுகளை மாற்றி செட்டையும் 6-4 என கைப்பற்றி இறுதிக்குள் நுழைந்தாா்.
Advertisement
Advertisement
இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலியின் லுகா நாா்டி-சீன தைபேயின் சுன் ஷிஹினை எதிா்கொண்டாா். 3 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் எளிதாக வெல்வாா் எனக் கருதப்பட்ட லுகா கடுமையாக போராடி 6-4, 4-6,7-6 என்ற செட் கணக்கில் சுன் ஷின்னை வென்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.