ஆசிய அணிகள் பாட்மின்டன்: இந்திய அணியில் சிந்து, பிரணாய்
ஆசிய அணிகள் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி 20 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
புது தில்லி: ஆசிய அணிகள் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி 20 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதில் பிரதான போட்டியாளர்களான பி.வி.சிந்து, ஹெச்.எஸ். பிரணாய், லக்ஷயா சென், கே.ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்போட்டி, வரும் பிப்ரவரி 13 முதல் 19 வரை மலேசியாவில் நடைபெறவுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறும் வகையில் ரேங்கிங் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ள இந்தப் போட்டி முக்கியமானதாகும்.
கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியின்போது முழங்காலில் காயம் கண்டு சிகிச்சையில் இருக்கும் சிந்து, இந்தப் போட்டியில் பங்கேற்கும் வகையில் உடற்தகுதிபெறுவார் எனத் தெரிகிறது. "சென்' சகோதரர்களான லக்ஷயா, சிராக்கும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்களுடன், நட்சத்திர இரட்டையர்களான சாத்விக் சாய்ராஜ்/சிராக் ஷெட்டியும் இணைந்துள்ளனர்.
இப்போட்டியில் இந்தியா இதுவரை 2 முறை வெண்கலப் பதக்கம் (2016, 2018) வென்றுள்ளது.
அணி விவரம்:
ஆடவர்: ஹெச்.எஸ். பிரணாய், லக்ஷயா சென், கே. ஸ்ரீகாந்த், சிராக் சென், சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, துருவ் கபிலா, எம்.ஆர். அர்ஜுன், சூரஜ் கோலா, பிருத்வி ராய்.
மகளிர்: பி.வி. சிந்து, அன்மோல் கார்ப், தன்வி சர்மா, ஆஷ்மிதா சாலிஹா, டிரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ, பிரியா தேவி, ஷ்ருதி மிஸ்ரா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.