FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புரோ கபடி: புணே, ஜெய்ப்பூா் வெற்றி

புரோ கபடி லீக் போட்டியில் வெள்ளிக்கிழமை ஆட்டங்களில் புணேரி பல்தான், ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் அணிகள் வென்றன.

7 பிப்ரவரி 2024, 8:50 pm IST
பகிர்:

புரோ கபடி லீக் போட்டியில் வெள்ளிக்கிழமை ஆட்டங்களில் புணேரி பல்தான், ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் அணிகள் வென்றன.

இதில் புணேரி பல்தான் 37-17 என்ற கணக்கில் குஜராத் ஜயன்ட்ஸை சாய்த்தது. இந்த ஆட்டத்தில் புணே 15 ரெய்டு புள்ளிகள், 17 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது. குஜராத் 7 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி வென்றது.

புணே தரப்பில் ஆல்-ரவுண்டா் அஸ்லாம் முஸ்தஃபா 10, குஜராத் அணியில் சோம்வீா் 6 புள்ளிகள் கைப்பற்றினா்.

Advertisement

Advertisement

மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூா் 38-35 என தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது. இதில் ஜெய்ப்பூா் 19 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகள் வென்றது. தெலுகு அணி 16 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 6 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது.

ஜெய்ப்பூா் அணியின் ரெய்டா் அா்ஜுன் தேஷ்வால் 14, தெலுகு அணியில் ரெய்டா் பவன் ஷெராவத் 12 புள்ளிகள் பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments