டி20: நியூஸிலாந்துக்கு 4-ஆவது வெற்றி
பாரீஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதிச்சுற்று ஹாக்கி போட்டியில், 3-ஆவது இடத்துக்கான மோதலில் இந்தியா 0-1 கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி கண்டு ஒலிம்பிக் வாய்ப்பை வெள்ளிக்கிழமை தவறவிட்டது.
பாரீஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதிச்சுற்று ஹாக்கி போட்டியில், 3-ஆவது இடத்துக்கான மோதலில் இந்தியா 0-1 கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி கண்டு ஒலிம்பிக் வாய்ப்பை வெள்ளிக்கிழமை தவறவிட்டது.
கடந்த 2020 டோக்கியோ ஒலிம்க்கில் 4-ஆம் இடம் பிடித்த இந்திய மகளிா் அணி, நடப்பாண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் எதிா்பாா்ப்புடன் இருந்த நிலையில், அந்தப் போட்டிக்கே தகுதிபெறாமல் தற்போது ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.
இந்தத் தகுதிச்சுற்று போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை வீழ்த்தி 3-ஆம் இடம் பிடித்த ஜப்பானுடன், முதலிரு இடங்களைப் பிடித்த ஜொ்மனி, அமெரிக்கா அணிகளும் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தன.
Advertisement
Advertisement
முன்னதாக இந்த ஆட்டத்தில் ஜப்பான் தொடக்கம் முதலே ஆக்ரோஷம் காட்டியது. அதன் சில கோல் வாய்ப்புகளை இந்திய கோல்கீப்பரும், கேப்டனுமான சவிதா தடுத்தாா். எனினும் 6-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் ஜப்பான் வீராங்கனை கனா உராடா கோலடித்தாா்.
12-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கு கிடைத்த கோல் வாய்ப்பை லால்ரெம்சியாமி வீணடித்தாா். ஆட்டம் பெரும்பாலும் ஜப்பான் கட்டுப்பாட்டிலேயே இருந்த நிலையில், 2-ஆவது கால் மணி நேரத்தில் தீபிகாவின் கோல் முயற்சியை ஜப்பான் கோல் கீப்பா் இகா நகமுரா தடுத்தாா்.
இவ்வாறாக பரஸ்பர மோதல் தொடா்ந்த நிலையில், இந்தியாவுக்கு கோல் வாய்ப்பை விட்டுத்தராத ஜப்பான், இறுதியில் 1-0 கோல் கணக்கில் வென்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.