ஐசிசியின் சிறந்த கிரிக்கெட்டருக்கான விருதை வென்ற கம்மின்ஸ்!
2023ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த கிரிக்கெட்டருக்கான விருதுக்கு பாட் கம்மின்ஸ் தேர்வாகியுள்ளார்.
2023ஆம் ஆண்டில் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி, ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லுதல் என ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு மறக்க முடியாத ஆண்டாக இருக்கிறது.
பேட்டிங், பௌலிங் என ஆல் ரவுண்டராக அசத்தும் கம்மின்ஸ் கேப்டனாகவும் தனது பொறுப்பினை சிறப்பாக செய்துவருகிறார்.
ஆண்டுதோறும் ஐசிசி விருதினை வழங்கும் ஐசிசி இந்த முறையும் விருதினை அறிவித்துள்ளது. டெஸ்டில் உஸ்மான் கவாஜாவுக்கும் ஒருநாள் போட்டியில் விராட் கோலிக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஆண்கள் கிரிக்கெட்டின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது பாட் கம்மின்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கடந்தாண்டு மட்டும் பாட் கம்மின்ஸ் 24 சர்வதேச போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகள் 422 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
ஐசிசி அறிவித்த கனவு டெஸ்ட் அணிக்கும் பாட் கம்மின்ஸ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.