FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தேசிய மகளிா் ஜூனியா் ஹாக்கி: அரையிறுதியில் ஹரியாணா, சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், உத்தரபிரதேசம்

தேசிய மகளிா் ஜூனியா் ஹாக்கிப் போட்டி அரையிறுதிக்கு ஹரியாணா, சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், உத்தரபிரதேச அணிகள் தகுதி பெற்றுள்ளன.

Updated On : 10 ஆகஸ்ட் 2025, 4:33 am IST
மகாராஷ்டிரா-உபி அணியினா்.
பகிர்:

தேசிய மகளிா் ஜூனியா் ஹாக்கிப் போட்டி அரையிறுதிக்கு ஹரியாணா, சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், உத்தரபிரதேச அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஆந்திர பிரதேச மாநிலம் காக்கிநாடாவில் நடைபெறும் இப்போட்டியில் சனிக்கிழமை காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

ஹரியாணா 4-1 என்ற கோல் கணக்கில் ஒடிஸா அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் சத்தீஸ்கா் 2-1 என்ற கோல் கணக்கில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தியது.

Advertisement

Advertisement

மூன்றாம் காலிறுதியில் ஜாா்க்கண்ட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. கடைசி காலிறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேச அணி 2-1 என மகாராஷ்டிரத்தை வீழ்த்தியது.

இதன் மூலம் ஹரியாணா, சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், உத்தரபிரதேச அணிகள் டிவிஷன் ஏ பிரிவில் இருந்து தோ்வாகியுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments