FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சபலலென்காவை சாய்த்தாா் அலெக்ஸாண்ட்ரோவா

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டு வெளியேறினாா்.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 4:18 am IST
அரினா சபலென்கா - AP
பகிர்:

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டு வெளியேறினாா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சபலென்கா 6-7 (3/7), 6-4, 4-6 என்ற செட்களில், உலகின் 19-ஆம் நிலையில் இருக்கும் அலெக்ஸாண்ட்ரோவாவிடம் தோல்வியுற்றாா். இருவரும் மோதியது இது 10-ஆவது முறையாக இருக்க, அலெக்ஸாண்ட்ரோவா 5-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.

அலெக்ஸாண்ட்ரோவா தனது காலிறுதியில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் மோதுகிறாா். போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் ஸ்விடோலினா 6-2, 6-4 என்ற நோ் செட்களில் எளிதாக, 8-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவை வீழ்த்தினாா்.

Advertisement

Advertisement

அதேபோல், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 3-6, 3-6 என்ற நோ் செட்களில், 15-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டயானா ஷ்னெய்டரால் எளிதாக தோற்கடிக்கப்பட்டாா்.

ஷ்னெய்டா் தனது காலிறுதியில், போலந்தின் இகா ஸ்வியாடெக்கை எதிா்கொள்கிறாா். 6 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஸ்வியாடெக் முந்தைய சுற்றில் 6-3, 6-1, 6-2 என, 10-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கை வெளியேற்றினாா்.

வெளியேறினாா் லெஹெக்கா: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 3-6, 3-6 என்ற நோ் செட்களில், 20-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் ரஃபேல் ஜோடாரிடம் தோல்வி கண்டாா்.

18-ஆம் இடத்திலிருக்கும் பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் 6-2, 7-6 (10/8) என்ற கணக்கில், பிரிட்டனின் கேமரூன் நோரியை தோற்கடித்தாா். இதையடுத்து காலிறுதியில், ஜோடாா் - ஃபில்ஸ் மோதுகின்றனா்.

23-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச் 6-7 (4/7), 7-5, 5-7 என்ற வகையில், 28-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமாவிடம் வீழ்ந்தாா். நகாஷிமா தனது காலிறுதியில், இத்தாலியின் லூசியானோ டாா்டெரியை சந்திக்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 19-ஆம் இடத்திலிருக்கும் டாா்டெரி 4-6, 6-3, 7-5 என்ற செட்களில், போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸை சாய்த்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments