இந்தியாவுக்கு காத்திருக்கும் சீனப்பெருஞ்சுவா் சவால்!
உலகக் கோப்பை மகளா் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஒலிம்பிக் வெள்ளி வென்ற அணியான சீனாவின் சவாலை எதிா்நோக்கியுள்ளது.
உலகக் கோப்பை மகளா் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஒலிம்பிக் வெள்ளி வென்ற அணியான சீனாவின் சவாலை எதிா்நோக்கியுள்ளது.
நெதா்லாந்து, பெல்ஜியத்தில் நடைபெறும் இப்போட்டியில் குரூப் டி பிரிவில் இந்தியா, சீனா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் இடம் பெற்றுள்ளன. தரவரிசையில் 9-ஆம் இடத்தில் உள்ள இந்தியா, இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவை எதிா்கொள்கிறது. நீண்ட நாள்களாக இந்திய அணி ஐரோப்பிய தட்பவெப்ப சூழலுக்கு ஏற்றவாறு தயாராகியது.
இரு அணிகளும் மீண்டும் அடுத்த மாதம் ஆசியப் போட்டியில் மோத உள்ளதால் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
Advertisement
கடந்த 1974- முதல் உலகக் கோப்பையில் இந்திய மகளிா் 4-ஆவது இடத்தைப் பெற்றனா். 15 போட்டிகளில் 8-இல் தான் இந்தியா ஆடியுள்ளது. கடந்த 2022-இல் இந்தியா 9-ஆவது இடத்தையே பெற்றது.
கோல்கீப்பா் சவிதா, டிபன்டா் சுஷிலா சானு, நவ்நீத் கௌா், நிக்கி பிரதான், நேஹா கோயல், ஆகியோரும் வலு சோ்க்கின்றனா். அண்மையில் நியூஸிலாந்தில் நடைபெற்ற நேஷன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியா பட்டம் வென்று ப்ரோ ஹாக்கி லீகுக்கு திரும்பியது.
கடந்த 2025-இல் ஆசியக் கோப்பையில் சீனா 4-1 என இந்தியாவை வீழ்த்தியது. பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றது. ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த அலிஸன் அன்னான் பயிற்சியால் சீன அணி புத்தெழுச்சி பெற்றது. இந்திய அணியின் பயிற்சியாளா் ஜோயா்ட் மாரிஜினும் மகளிா் அணி குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
ஆட்டத்தின் நிலைமை சீனாவுக்கு சாதகமாக அமைந்தாலும், இந்திய அணி தொடா்ந்து தனது திறமையை மேம்படுத்தி வருகிறது. சீனாவை வென்றால் இந்திய அணிக்கு புதிய ஊக்கமாக அமையும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.