முகப்பு
செய்திகள்

அமைதியாக இருக்க மாட்டோம்: எகிப்து கால்பந்து சங்கம் அறிக்கை!

ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய போட்டி தொடர்பாக எகிப்து கால்பந்து சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Updated On : 9 ஜூலை 2026, 3:15 pm IST
நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எகிப்து அணி வீரர்கள் - AP
பகிர்:

ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய போட்டி தொடர்பாக எகிப்து கால்பந்து சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதிக்கு முந்தைய 16 அணிகள் சுற்றில் ஆர்ஜென்டீனாவிடம் எகிப்து தோற்றது. அந்தப் போட்டியில் நடுவரின் முடிவு பாரபட்சமாக இருந்ததாக எகிப்து கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

உலகக்கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த கம்பேக் வெற்றியாக ஆர்ஜென்டீனா - எகிப்து போட்டி அமைந்தது. போட்டியின் 78 நிமிடங்கள் வரை 2-0 என்ற கணக்கில் பின் தங்கியிருந்த ஆர்ஜென்டீனா அடுத்த 13 நிமிடங்களில் 3 கோல்களை அடித்து அதிரடியாக வென்றது. இது எகிப்து அணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

Advertisement

Advertisement

அப்போட்டியில், நடுவரின் செயல்பாட்டை எகிப்து பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் உள்பட பலரும் விமர்சித்தனர். இதுபற்றி எகிப்து கால்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “எகிப்து தேசிய கால்பந்து அணியின் உரிமைகள், நலன்களை பாதுகாப்பது என்பது, அதனைப் புறக்கணிக்கவோ, குறைத்து மதிப்பிடவோ, இரண்டாம் பட்சமாக நடத்தக்கூடிய விஷயமோ அல்ல. இந்த விவகாரத்தில் நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். இது முழு உறுதியுடன் நாங்கள் சுமக்கும் பொறுப்பாகும்” என்று தெரிவித்துள்ளது.

வீடியோ அசிஸ்டண்ட் ரெஃப்ரீ முறையை நடுவர் சரியாகப் பயன்படுத்தத் தவறியதே ஆர்ஜென்டீனாவின் தோல்விக்குக் காரணம் எனக் குறிப்பிட்ட எகிப்து கால்பந்து சங்கம், “ஆட்டத்தின் போக்கைத் தீவிரமாக பாதித்த முடிவுகள், பல முக்கிய நிகழ்வுகள் குறித்து ஆழமான கேள்விகளையும் கவலைகளையும் எழுப்பியுள்ளது. கால்பந்து உலகின் மிகப்பெரிய மேடையில் வெளிப்படைத்தன்மை முக்கியம். இதனை வலியுறுத்தி பல கால்பந்தாட்ட விமர்சகர்களும் எகிப்தை ஆதரித்துப் பேசியுள்ளனர்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஃபிஃபா நடுவர் குழுத் தலைவர் பியர்லூகி கொலினா நேற்று வெளியிட்ட அறிக்கையில், “அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு இங்கு இடமில்லை. ஃபிஃபா நடுவர்களின் நேர்மையை யாரும் கேள்விக்குள்ளாக்க முடியாது. அவ்வாறு கேள்விக்குள்ளாக்கினால், அது அவர்களை மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல்களை உருவாக்கும் விதமாக எதிர்வினைகளைத் தூண்டக்கூடும். இது சரியானதல்ல” என்று தெரிவித்தார்.

மேலும், "கோல் அடிக்க நகரும்போது விதிமீறல் கண்டறியப்பட்டு, அது கோல் அடிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தியது தெரிந்தால், களத்தில் உள்ள நடுவர் அதை மறுஆய்வு செய்ய வி.ஏ.ஆர். நடுவர் முறை பரிந்துரைக்கும். அந்தக் குறிப்பிட்ட கோலின் போது எகிப்து வீரர் அட்டியா, ஆர்ஜென்டீனாவின் 6-ம் எண் வீரரான லிசாண்ட்ரோ மார்டினெஸின் காலைத் தெளிவாக மிதித்துள்ளார். ஃபவுல் என்பது ஃபவுல் தான். அது வெளிப்படையாகத் தெரிந்தாலும் நடுவர் ஆடுகளத்தில் அதைப் பார்க்கவில்லை என்றால் வி.ஏ.ஆர். நடுவர் தலையிடலாம்” என்று அவர் பேசியுள்ளார்.

எகிப்து வீரர் மோஜ்தபா ஜிகோ 67-வது நிமிடத்தில் கோல் அடித்து 2-0 என்று கோல் கணக்கை ஏற்றினார். ஆனால், 79-வது நிமிடம் தொடங்கி அடுத்த 13 நிமிடங்களில் ஆர்ஜென்டீனா 3 கோல்கள் அடித்தது.

இதனைத் தொடர்ந்து, எகிப்து பயிற்சியாளார் இனவெறித் தாக்குதலைக் குறிக்கும் விதமாக தனது கைகளை உயர்த்திக் காண்பித்தார். பின்னர், ஆர்ஜென்டீனா மற்றும் மெஸ்ஸிக்கு சாதகமான கால்பந்து நிர்வாகத்தால் எகிப்து அணி பாதிக்கப்பட்டதாகவும் அவர் புகாரளித்தார்.

மேலும், ஆட்டத்தின் உச்சக்கட்டத்தில் எகிப்து கோல்கீப்பிங் பயிற்சியாளர் சாஃபான் எல்சாகிருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது. அதேபோல, பல எகிப்து வீரர்களுக்கும் மஞ்சள் அட்டைகள் வழங்கப்பட்டன.

summary

Egyptian Football Association issued statement regarding the pre quarterfinal match

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments