எகிப்து - ஆர்ஜென்டீனா போட்டியில் பாகுபாடு? தெளிவான விதிகளுடன் பதிலளித்த ஃபிஃபா நடுவர் குழுத் தலைவர்!
ஃபிஃபா நடுவர் குழுவின் தலைவர் பியர்லூய்கி கொலினா பேசியது குறித்து...
ஆர்ஜென்டீனாவுக்கும் லியோனல் மெஸ்ஸிக்கும் நடுவர்கள் சாதகமாகச் செயல்பட்டதாக எகிப்து கால்பந்து அணியினர் ஃபிஃபா மீது அநீதி இழைக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தினர்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த ஃபிஃபா நடுவர் குழுவின் தலைவர் பியர்லூய்கி கொலினா, “இதுவரை திருப்தியான முடிவுகளே எடுக்கப்பட்டுள்ளன. நடுவர்களின் தீர்ப்புகள் யாருடைய தூண்டுதலினால் நடக்கிறது எனக் குறைகூற முடியாது” என்றார்.
ஆர்ஜென்டீனா 3-2 என கடைசி 13 நிமிஷங்களில் கம்பேக் அளித்து எகிப்து அணியை வீழ்த்தியது. இதில் பெனால்டி, ஃபௌல் (தவறுகள்) குறித்த நடுவர்களின் முடிவுகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாக எகிப்து அணியினர் குற்றம் சுமத்தினர்.
Advertisement
Advertisement
குறிப்பாக போட்டியின் 62ஆவது நிமிஷத்தில் எகிப்தின் மோஸ்டஃபா ஜிகோ இரண்டாவது கோல் அடித்தார். அது விஏஆர் தீர்ப்பினால் நீக்கப்பட்டது. எகிப்து வீரர் அட்டியா லிசான்ரோ மார்டினெஸை ஃபௌல் செய்வார். இதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த சர்சைகளுக்குப் பதிலளித்த ஃபிஃபா நடுவர் குழுவின் தலைவர் பியர்லூய்கி கொலினா பேசியிருப்பதாவது:
ஒவ்வொரு கோல் அடிக்கப்பட்ட பிறகும் ஏபிபி (அட்டாகிங் பொசசெசன் பேஸ்) மீதான விஏஆர் சோதனை நடத்தப்படுகிறது. கோல் அடிக்க தொடங்கும் பகுதியில் ஃபௌல் நடைபெற்று, அது கோலாக மாற தாக்கம் ஏற்படுத்தியிருந்தால் விஏஆர் கள நடுவருக்கு ஆய்வு செய்ய அனுப்பப்படும். இதில் கோல் அடித்ததற்கான நேரம், தூரம் எல்லாம் கிடையாது.
பொதுவாக நாங்கள் குறிப்பிட்ட சம்பவத்தை கவனத்தில் கொள்வோம். சமீபத்திய ஆர்ஜென்டீனா - எகிப்து ஆட்டத்தில் அட்டியா லிசான்ரோ மார்டினெஸ் மீதான ஃபௌலை சான்றாக எடுத்துக்கொள்ளலாம். இது நிச்சயமாக ஃபௌல். இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது எதேர்ச்சையானதா தேவையற்றது. நடுவர் இதனைப் பார்க்கத் தவறினாலும் விஏஆர் தலையிடும் வாய்ப்பு இருக்கிறது.
இதேபோல ஜூலியன் அல்வாரெஸ்- முகமது சாலாவிடம் செய்வது ஃபௌல் அல்ல. ஏனெனில், அல்வாரெஸ் முதலில் பந்தைத்தான் தொடுகிறார். பின்னர், பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திராத முகமது சாலாவைத் தொடுதல் ஃபௌல் ஆகாது. நல்லவேளையாக இதே போட்டியில் இது நடந்தது.
சில நேரங்களில் நடுவர்களின் சில தீர்ப்புகள் தனிப்பட்ட விதத்தில் மாற்றுக் கருத்துகள் ஏற்படுத்தலாம். ஆனால், இந்த உலகக் கோப்பை முழுவதும் விதிகளைப் பயன்படுத்திய விதத்தில் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இதனை விடியோவாகவும் தெளிப்படுத்தியுள்ளார்கள். அதனை இந்த லிங்கில் பார்க்கலாம்.
FIFA Chief Refereeing Officer Pierluigi Collina defends Egypt vs Argentina match officials
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.