FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அமெரிக்க யூடியூபரின் சாபம் முறிந்தது: ஆர்ஜென்டீனா வென்றதால், கதறி அழுத ஸ்பீடு!

அமெரிக்க யூடியூபர் ஸ்பீட் எனப்படும் டாரன் வாட்கின்ஸ் ஜூனியரின் வைரல் விடியோ குறித்து...

Updated On : 12 ஜூலை 2026, 12:09 pm IST
கதறி அழும் டாரன் வாட்கின்ஸ் ஜூனியர். - படங்கள்: யூடியூப் / ஐஷோஸ்பீட்
பகிர்:

அமெரிக்க யூடியூபர் ஸ்பீட் எனப்படும் டாரன் வாட்கின்ஸ் ஜூனியரின் சாபம் முடிவடைந்த தருணத்தில் கதறி அழுத விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கான்சாஸ் சிட்டியில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீன அணி ஸ்விட்சர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.

அமெரிக்காவைச் சேர்ந்த டாரன் வாட்கின்ஸ் ஜூனியர் (21 வயது) ஐஷோஸ்பீட் எனும் யூடியூப்பை நடத்திவருகிறார். இவரைச் செல்லமாக ஸ்பீட் என ரசிகர்கள் அழைப்பார்கள். தனது வித்தியாசமான முகபாவனைகள், ஓடும் திறனில் மக்களிடையே கவனம் பெற்றார்.

Advertisement

Advertisement

கால்பந்து உலகில் ஸ்பீட் தன்னை மிகப்பெரிய கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகர் எனக் கூறிக்கொள்வார். அவரிடம் இருந்து சமீபத்தில் புதிய காலணிகளும் ஸ்பீடுக்கு பரிசாக வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கோப்பையில் ஸ்பீடு எந்த அணிக்கு ஆதரவு தெரிவிக்கிறாரோ அந்த அணி தோல்வியுறுவது வழக்கமாக இருந்து வந்தது. இதனால், கடைசி போட்டியில் ஸ்பீடு இரண்டு அணிகளின் ஆடையை சேர்த்து அணிந்து வந்தார்.

இந்த நிலையில், மெஸ்ஸிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஸ்பீடு ஆர்ஜென்டீனாவின் ஜெர்ஸியை அணிந்து வந்தார். இதனால், அந்த அணி தோல்வியடையும் என அவர் நினைத்து வந்தார். ஆனால், ஆர்ஜென்டீனா வென்று அவருக்கு அதிர்ச்சி அளித்தது.

இருப்பினும் தனது சாபம் முறிந்த மகிழ்ச்சி மற்றும் தான் நினைத்தது நடக்கவேமாட்டேன்கிறது என்ற சோகத்தில் தலையில் அடித்து அழுத காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின.

முன்னதாக, கேப் வெர்டே உடனான ஆர்ஜென்டீனா ஆட்டத்தில் ஸ்பீடு மீது இனவெறி ரீதியான கருத்துகள் முன்வைக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரிப்பதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.

summary

Youtuber I Show Speed support argentina and his curse broken and he is crying like child viral video

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments