FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஃபாக்லாந்து தீவு போஸ்டர் சர்ச்சையை ஃபிஃபா விசாரிக்க வேண்டும்: பிரிட்டன்

ஆர்ஜென்டீன வீரர்கள் பயன்படுத்திய ஃபாக்லாந்து தீவு பதாகைகள் குறித்து ஃபிஃபா விசாரிக்க பிரிட்டன் கோரிக்கை வைத்துள்ளது குறித்து...

Updated On : 16 ஜூலை 2026, 3:26 pm IST
1982 போரில் இழந்தவர்களுடன் மாரடோனா ஓவியம். - படம்: ஏபி
பகிர்:

பிரிட்டன் அரசாங்கம் கால்பந்து உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீன வீரர்கள் பதாகைகள் பயன்படுத்தியது குறித்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளது.

நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் மோதிக்கொண்டனர்.

இந்தப் போட்டியில் வென்ற பிறகு, 1982ல் நடந்த போரினைக் குறிப்பிட்டு ஃபாக்லாந்து தீவுக்காரர்கள் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்தவர்கள் என்ற வாசகங்கள் அடங்கிய (லாஸ் மால்வினஸ் சன் ஆர்ஜென்டினஸ்) போஸ்டரை ரசிகர்கள் ஏந்தி கொண்டாடினர்.

Advertisement

Advertisement

பொதுவாகவே, ஆர்ஜென்டீன நாட்டைச் சேர்ந்தவர்கள் ஃபாக்லாந்து தீவை எங்களுக்குச் சொந்தமானதெனக் கூறுவார்கள். இது அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனின் வணிகச் செயலாளர் பீட்டர் கைல், “முழுமையாக பொருத்தமற்றது. அரசியல் கால்பந்தில் இருந்து தனியாக இருக்க வேண்டும். உண்மையில், அரசியல் ரீதியாக பிரிந்து இருப்பவர்களை கால்பந்து மூலம் ஒருங்கிணைப்பதே உலகக் கோப்பைதான். இதனை ஃபிஃபா முழுமையாக விசாரிக்குமென நம்புகிறேன் என்றார்.

ஆர்ஜென்டீனாவுக்கு 480 கிலோமீட்டரும் தொலைவிலும் பிரிட்டனுக்கு 13,000 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும் ஃபாக்லாந்து தீவு பிரச்னையினால் 1982ல் போர் நடைபெற்றது. 10 வாரங்கள் நடைபெற்ற இந்தப் போரில் 649 ஆர்ஜென்டீன வீரர்களும் 255 பிரிட்டன் வீர்ரகளும் இறந்தார்கள்.

1833ல் தங்களிடம் இருந்த ஃபாக்லாந்து தீவை, சட்டவிரோதமாக பிரிட்டன் எடுத்துச் சென்றதாக ஆர்ஜென்டீனா குற்றம் சுமத்துகிறது.

summary

UK urges FIFA to investigate Argentina over Falklands banner at World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments