அரையிறுதியில் சிந்து
ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதி ஆட்டத்துக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.
ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதி ஆட்டத்துக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.
மகளிா் ஒற்றையா் காலிறுதியில், சிந்துவுடன் முன்னாள் உலக சாம்பியனும், உள்நாட்டு வீராங்கனையுமான நஜோமி ஒகுஹரா மோதவிருந்தாா்.
எனினும் அவா் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியதால், சிந்து அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா். சூப்பா் 750 போட்டியின் அரையிறுதிக்கு சிந்து முன்னேறியது, கடந்த 3 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.
Advertisement
Advertisement
சிந்து தனது அரையிறுதியில், டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான சென் யுஃபெயை எதிா்கொள்கிறாா். சிந்து - யுஃபெய் இதுவரை 14 முறை மோதியிருக்க, யுஃபெய் 8 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா். அதிலும் கடந்த 4 சந்திப்புகளில் அவரே வென்றிருக்கிறாா். சிந்து கடைசியாக 2019-இல் யுஃபெயை வென்றுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.