FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இளம் வயதில் கால்பந்து உலகக்கோப்பை வென்ற வீரர்கள்!

கால்பந்து உலகக்கோப்பையை மிக இளம் வயதில் வென்ற வீரர்கள் பற்றி...

Updated On : 20 ஜூலை 2026, 4:21 pm IST
லாமின் யமால்
பகிர்:

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடர் நிறைவடைந்துள்ளது. இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவை 0-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றிபெற்றது.

பல இளம் வயது வீரர்கள் இத்தொடரில் பங்கேற்றனர். இதில் உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியில் மட்டும் லாமின் யமால் உள்பட 23 வயதுக்குள்பட்ட 7 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இளம் வயதில் கால்பந்து உலகக்கோப்பையை வென்றவர்களின் பட்டியலை ஃபிஃபா வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதில், முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்தவர்களைக் காண்போம்.

1) பீலே - 17 வயது மற்றும் 249 நாட்கள்

ஸ்வீடனுக்கு எதிராக 1958 ஆம் ஆண்டு பிரேசில் உலகக்கோப்பை வென்றது. இத்தொடரில் மொத்தமாக 6 கோல்கள் அடித்த பீலே இறுதிப்போட்டியில் மட்டும் 2 கோல்களை அடித்தார்.

இதில், 5 - 2 என்ற கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி பிரேசில் வென்றது.

அணியினருடன் பீலே

2) ரொனால்டோ – 17 வயது மற்றும் 298 நாட்கள்

இத்தாலிக்கு எதிரான 1994-ம் ஆண்டு உலககோப்பை இறுதிப்போட்டியில் பிரேசில் 0 - 0 என்ற கணக்கில் சமன் செய்து பெனால்டியில் 3 - 2 என்ற கணக்கில் வென்றது.

இப்போட்டியில், இளம் வீரரான ரொனால்டோ மாற்று வீரராக இருந்த நிலையில், எந்தப் போட்டியிலும் களமிறங்கவில்லை.

ரொனால்டோ

3) கியூசெப்பே பெர்கோமி – 18 வயது மற்றும் 174 நாட்கள்

1982-ம் ஆண்டு இத்தாலி அணி இத்தொடரின் இறுதிப்போட்டியில் மேற்கு ஜெர்மனி அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.

அவர் இத்தொடரில் எந்த கோலும் அடிக்கவில்லை.

கியூசெப்பே பெர்கோமி

4) கவுடின்ஹோ – 19 வயது மற்றும் 6 நாட்கள்

1962-ம் ஆண்டு பிரேசில் அணி இத்தொரின் இறுதிப்போட்டியில் செக்கோஸ்லோவாக்கியா அணியை வீழ்த்தியது. இத்தொடரில் கவுடின்ஹோ எந்த கோலும் அடிக்கவில்லை.

கவுடின்ஹோ - dinmani online

4) லாமின் யமால் - 19 வயது மற்றும் 6 நாட்கள்

2026 உலகக்கோப்பைத் தொடரில் 5 போட்டிகளில் பங்கேற்ற இவர், 1 கோல் அடித்துள்ளார்.

ஸ்பெயின் அணி இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவை 0-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

லாமின் யமால்

6) மார்கோ அன்டோனியோ – 19 வயது மற்றும் 135 நாட்கள்

பிரேசில் வீரரான இவர் 1970 உலகக்கோப்பையில் 2 போட்டிகளில் விளையாடி கோல் எதுவும் அடிக்கவில்லை. அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வீழ்த்தியது.

மார்கோ அன்டோனியோ

7) பாவ் குபார்சி – 19 வயது மற்றும் 178 நாட்கள்

2026 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய ஸ்பெயின் அணியின் நடுக்கள வீரரான இவர் 8 போட்டிகளில் விளையாடியுள்ளார். இறுதிப்போட்டியில் ஸ்பெயின் ஆர்ஜென்டீனாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

பாவ் குபார்சி

8) கிலியன் எம்பாப்பே – 19 வயது மற்றும் 207 நாட்கள்

2018 உலகக்கோப்பைப் போட்டியில் பிரான்ஸ் அணிக்கு 7 போட்டிகளில் விளையாடி 4 கோல்கள் அடித்தார் எம்பாப்பே. இறுதிப்போட்டியில் க்ரோசியாவை எதிர்கொண்ட பிரான்ஸ் அணி 4-2 என்ற கணக்கில் வென்றது. இறுதிப்போட்டியில் எம்பாப்பே 1 கோல் அடித்தார்.

கிலியன் எம்பாப்பே

9) மசோலா – 19 வயது மற்றும் 309 நாட்கள்

பிரேசில் வீரரான இவர் 1958 உலகக்கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடி 2 கோல்கள் அடித்தார். இறுதிப்போட்டியில் ஸ்வீடனை எதிர்கொண்ட பிரேசில் 5-2 என்ற கணக்கில் வென்றது.

- dinmani online

10) ரூபன் மோரன் – 19 வயது மற்றும் 344 நாட்கள்

உருகுவே வீரரான இவர் 1950 உலகக்கோப்பையில் 1 போட்டியில் விளையாடி கோல் எதுவும் அடிக்கவில்லை. இறுதிப்போட்டியில் பிரேசிலை எதிர்கொண்ட உருகுவே 2-1 என்ற கணக்கில் வென்றது.

ரூபன் மோரன்
summary

Players who won the Football World Cup at a young age!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments