ஜூலியன் அல்வாரெஸ் விற்பனைக்கு அல்ல..! அத்லெடிகோ மாட்ரிட் அறிவிப்பு!
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ஜூலியன் அல்வாரெஸ் குறித்து...
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ஜூலியன் அல்வாரெஸ் அத்லெடிகோ மாட்ரிட் அணியில் விளையாடி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் இவரை வாங்குவதற்குப் பல அணிகளும் முயற்சித்து வருகின்றன.
ஜூலியன் அல்வாரெஸ் ஒருவருக்காக ரியல் மாட்ரிட் அணி 150 மில்லியன் யூரோஸ் (சுமார் ரூ. 1,675 கோடிகள்) கேட்டும் விற்க முடியாதென அத்லெடிகோ மாட்ரிட் அணி அறிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் லீக்கில் அதிகமுறை (15) கோப்பை வென்ற அணியாக ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் கிளப் இருக்கிறது. இந்த அணிக்கு தற்போது புதிய பயிற்சியாளராக ஜோஸ் மொரிங்கோ பொறுப்பேற்றுள்ளார்.
Advertisement
Advertisement
தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய கோப்பைகளை வெல்லாமல் இருக்கும் ரியல் மாட்ரிட் அணிக்கு பயிற்சியாளர்கள் மாறிக்கொண்டே வருகிறார்கள்.
ரியல் மாரிட் அணியின் தலைவர் ஃப்ளோரென்டினோ பெரெஸ் மறுதேர்தலுக்கு முன்பாக, “ நமது முன்மொழிவை தீவிரமாகப் பரிசீலித்த அத்லெடிகோ மாட்ரிட் நன்றி தெரிவித்துள்ளது. ஆனால், அவர்கள் இரண்டு கிளப் நலன் கருதி இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்ளவில்லை” எனக் கூறியுள்ளார்.
அத்லெடிகோ மாட்ரிட் இதனை முழுமையாக மறுத்து, “நாங்கள் யாருக்கும் நன்றி சொல்லவில்லை. யாருடைய முன்மொழிவையும் ஆய்வு செய்யவில்லை. பார்சிலோனாவை விட நீங்கள் சிரிப்பையூட்டுகிறீர்கள்” என பதில் கூறப்பட்டுள்ளது.
அத்லெடிகோவின் தலைவர் என்ரிக் செரெசோ, “ஜூலியன் விற்பனைக்கு அல்ல. நாங்கள் அவரை விற்க முயலவில்லை"எனக் கூறியுள்ளார்.
உலகக் கோப்பைப் போட்டியில் ஆர்ஜென்டீன அணிக்கு மெஸ்ஸிக்குப் பிறகு முக்கியமான வீரராக ஜூலியன் அல்வாரெஸ் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவரை பார்சிலோனா அணியும் வாங்க முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகின.
Real Madrid says Atletico Madrid rejected its offer of 150 million euros for Julian Alvarez
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.