முகப்பு
செய்திகள்

ரூ.4,438 கோடிக்கு தனது சிறுவயது கால்பந்து அணியை வாங்கும் செர்ஜியோ ராமோஸ்!

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் செர்ஜியோ ராமோஸ் குறித்து...

செர்ஜியோ ராமோஸ். - படம்: எக்ஸ் / செவில்லா கால்பந்துக் கழகம்.
பகிர்:

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் செர்ஜியோ ராமோஸ் தனது சிறுவயது கிளப்பான செவில்லாவை வாங்குவதாக அந்த நாட்டைச் சேர்ந்த ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஸ்பானிஷ் அவுட்லெட் இஐ பைஸ் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள தகவலின்படி 400 மில்லியன் யூரோஸ் (470 மில்லியன் டாலர்) அதாவது இந்திய மதிப்பில் ரூ.4,438 கோடிக்கு செவில்லா கிளப்பை வாங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

செவில்லா கால்பந்து அணி 1890ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சுமார் 136 ஆண்டுகள் பழமையான கால்பந்து கிளப். இந்த அணி 1945-46 சீசனில் லா லிகா கோப்பையை வென்றுள்ளது. ஸ்பானிஷ் கோப்பையை 5 முறை வென்று அசத்தியுள்ளது.

Advertisement

Advertisement

செவில்லா அணியின் 80 சதவிகித பங்குகளை செர்ஜியோ ராமோஸ் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு பங்கின் விலை சுமார் 3,500 யூரோஸ் எனக் கூறப்படுகிறது. லா லிகா மற்றும் ஸ்பானிஷ் தேசிய விளையாட்டு ஆணையம் இதற்கு அனுமதி அளித்ததும் விரைவில் அதிகாரபூர்மாக அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டிற்காக உலகக் கோப்பை, 2 யூரோ சாம்பியன்ஷிப் வென்ற ராமோஸ் ரியல் மாட்ரிட் அணியில் விளையாடி உலகப் புகழ்ப் பெற்றார். மிகச் சிறந்த டிஃபெண்டரான இவர் அந்த அணியில் 22 மேஜர் கோப்பகளை வென்றுள்ளார்.

40 வயதாகும் ராமோஸ் 2023-24 சீசனில் செவில்லா அணியில் விளையாடினார். முன்னதாக 2004-05 சீசனில் விளையாடி இருக்கிறார். மெக்சிகனில் இருக்கும் சி.எஃப். மான்டெர்ரே அணியில் 2025-26 சீசனில் விளையாடினார்.

இந்த நிலையில், தனது சிறுவயது கிளப்பை வாங்கியுள்ளதாகவும் விரைவில் அவர் அந்த அணிக்கு உரிமையாளராகவும் மாறுவர் எனக் கூறப்படுகிறது. லா லிகா புள்ளிப் பட்டியலில் செவில்லா 13ஆவது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

summary

Sergio Ramos agrees to buy boyhood club Sevilla, Spanish media report

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments