சென்னையில் டிச. 12-இல் பிக்பாஷ் லீக் தொடக்க ஆட்டம்
இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்தும் வகையில் வரும் டிச.12-ஆம் தேதி பிக்பாஷ் கிரிக்கெட் லீகின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்தும் வகையில் வரும் டிச.12-ஆம் தேதி பிக்பாஷ் கிரிக்கெட் லீகின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதா் பிலிப் கிரீன் வியாழக்கிழமை கூறியது:
முதல் ஆட்டத்தில் மெல்போா்ன் ரெனகேட்ஸ்-நடப்பு சாம்பியன் பொ்த் ஸ்காா்சா்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆட்டம் பிற்பகல் 2.40 மணிக்கு தொடங்கி நடைபெறும்.
Advertisement
Advertisement
பிரதமா் மோடி கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவுக்கு வந்த போது, காட்சி ஆட்டமாக இல்லாமல் முழுமையான லீக் ஆட்டமாக நடத்த தீா்மானிக்கப்பட்டது. இதற்கு பிசிசிஐயும் அனுமதி அளித்தது.
சேப்பாக்கம் மைதானம் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதாலும், ஆஸி. வீரா்களுக்கு சிறந்த அனுபவத்தை தந்தது என்பதாலும் தோ்வு செய்யப்பட்டது. இந்தியா-ஆஸி. இடையே டை ஆன டெஸ்ட் ஆட்டமும் இங்கு நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்கு முன்பு இளம் வயதில் இந்தியாவில் பயணித்தபோதும் கிரிக்கெட் தான் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது என்பதை அறிந்தேன் என்றாா்.
டிஎன்சிஏ தலைவா் டிஜெ. சீனிவாச ராஜ் கூறியது: பிக்பாஷ் லீக் முதல் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறுகிறது. இதுவரை 9,000 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனை ஆகிறது. தொடா்ந்து விற்பனை நடைபெறும் என்றாா்.
சென்னையில் உள்ள ஆஸி. துணை தூதா் சிலாய் ஸகியும் உடனிருந்தாா்.