பிரீமியர் லீக்: இந்த வாரத்தின் சிறந்த வீரராக ப்ரூனோ பெர்னான்டஸ் தேர்வு!
பிரீமியர் லீக்கில் இந்த வாரத்தின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதை வென்ற ப்ரூனோ பெர்னான்டஸ் குறித்து...
பிரீமியர் லீக்கில் இந்த வாரத்தின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதை மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ப்ரூனோ பெர்னான்டஸ் வென்றுள்ளார்.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற பிரீமியர் லீக்கின் 35ஆவது சீசன் (2026-27) தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அதிகமுறை மான்செஸ்டர் யுனைடெட் அணி 13 முறை கோப்பை வென்றுள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட் அணி இப்ஸ்விச் டவுன் அணியை 5-2 என வீழ்த்தி அசத்தியது. இந்தப் போட்டியில் ப்ரூனோ பெர்னான்டஸ் ஹாட்ரிக் கோல் அடித்து மிரட்டினார்.
Advertisement
Advertisement
கடைசியாக 2012-13 சீசனில் கோப்பை வென்றது. கடந்த பல சீசன்களாக கோப்பை வெல்லாமலே இருக்கும் இந்த அணிக்கு ப்ரூனோ பெர்னான்டஸ் நம்பிக்கை அளித்து வருகிறார்.
பிரீமியர் லீக்கில் ஒவ்வொரு வாரமும் சிறந்த வீரர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். அதன்படி இந்த வாரத்தின் சிறந்த வீரராக ப்ரூனோ பெர்னான்டஸ் தேர்வாகியுள்ளார்.
முதல் போட்டியில் தோல்வியுற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணி புள்ளிப் பட்டியலில் 10ஆவது இடத்தில் இருக்கிறது. மான்செஸ்டர் சிட்டி முதலிடத்திலும் ஆர்செனல் இரண்டாமிடத்திலும் இருக்கின்றன.
Manchester Uniteds Bruno Fernandes is Player of the week winner in Premier League
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.