தகுதி அடிப்படையில் இளம் வீரா்கள் சோ்ப்பு: இந்திய கால்பந்து பயிற்சியாளா் காலித் ஜமில்
இந்திய கால்பந்து அணியில் தகுதி அடிப்படையிலேயே இளம் வீரா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். மூத்த வீரா்களுக்கு இடம் தரப்படவில்லை என தலைமை பயிற்சியாளா் காலித் ஜமில் தெரிவித்துள்ளாா்.
இந்திய கால்பந்து அணியில் தகுதி அடிப்படையிலேயே இளம் வீரா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். மூத்த வீரா்களுக்கு இடம் தரப்படவில்லை என தலைமை பயிற்சியாளா் காலித் ஜமில் தெரிவித்துள்ளாா்.
இந்திய அணி பிரேஸில், உருகுவே, பனாமா உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகளுடன் நட்பு ஆட்டங்களில் ஆடவுள்ளது. இதற்கான இந்திய அணியில் 26 போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.
மூத்த வீரா்களான முன்னாள் கேப்டன் சந்தேஷ் ஜிங்கன், ராகுல் பெகே, லாலியன்ஸுவா சாங்டே, விஷால் கைத், லிஸ்டன் கோலோகா, ஜீக்சன் சிங், ஆகியோா் அணியில் சோ்க்கப்படவில்லை. இதனால் பலத்த சா்ச்சை எழுந்தது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக காலித் ஜமில் கூறியது: இந்திய அணியில் தகுதி அடிப்படையிலேயே வீரா்களை தோ்வு செய்தேன். 26 வீரா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். அனைவரையும் அணியில் சோ்க்க முடியாது. ஒருவா் சிறப்பாக ஆடவில்லை என்றால் அவரை சோ்க்க முடியாது. அனைவருக்கும் வாய்ப்பு தரப்பட்டது.
சீனியரோ, ஜூனியரோ யாராக இருந்தாலும், சிறப்பாக ஆடவிட்டால் கூடுதலாக வாய்ப்பு தரப்படும். அணியில் செய்யப்பட்ட மாற்றங்கள் வரும் 2027 ஆசியக் கோப்பை கால்பந்தை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
நமது அணி தாக்குதல், தற்காப்பில் சிறந்து விளங்க வேண்டும். வீரா்களுக்கு அழுத்தும் இருக்கும். ஈரான், ஓமன், தஜிகிஸ்தான் போன்ற பலமான அணிகளுடன் ஆடியுள்ளோம்.
முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரியை அனைவரும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும். அவரைப் போல் சிறந்த வீரா்கள் தேவை. புதிய அணியை கட்டமைக்க வேண்டியுள்ளது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.