FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மெஸ்ஸி போல விளையாடிய ஆண்டனி..! வைரலாகும் செய்கை விடியோ!

லா லிகா கால்பந்து தொடரில் வைரலாகும் ஆண்டனியின் செய்கை குறித்து...

5 செப்டம்பர் 2026, 2:05 pm IST
லா லிகா கால்பந்து தொடரில் வைரலான ஆண்டனியின் செய்கை. - படங்கள்: எக்ஸ் / ரியல் பெட்டிஸ்.
பகிர்:

லா லிகா கால்பந்து தொடரில் ரியல் பெட்டிஸ் அணியின் வீரர் ஆண்டனி போட்டிக்குப் பிறகு செய்த செய்கை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இன்று நடைபெற்ற லா லிகா போட்டியில் ரியல் பெட்டிஸ் அணி 1-0 என ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது. 81ஆவது நிமிஷத்தில்  டிராய் பாரட் கோல் அடிக்க, 90+4ஆவது நிமிஷத்தில் எம்பாபே பெனால்டியை கோலாக மாற்ற தவறவிட்டார்.

இந்தப் போட்டிக்குப் பிறகு ஆண்டனி 3 புள்ளிகளை தனது பாக்கெட்டில் வைத்துக்கொள்வதுபோல சைகை செய்தார். இந்த விடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

பிரேசிலைச் சேர்ந்த ஆண்டனி மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வந்தார். லோன் மூலமாக கந்த ஜன. 2025ல் ரியல் பெட்டிஸ் அணியில் இணைந்தார். வந்த முதல் போட்டியிலேயே கோல் அடித்தார்.

அடுத்தடுத்த போட்டிகளில் அசத்திய ஆண்டனி முதல் மாதத்திலேயே லா லிகா சிறந்த வீரருக்கான மாத விருதையும் வென்றார். ரியல் பெட்டிஸ் அணிக்கு ஆண்டனியின் வருகை புதிய உற்சாகத்தைப் பாய்ச்சியது.

பின்னர், செப்.1, 2025ல் நிரந்தரமாக ரியல் பெட்டிஸ் அணிக்கு ஒப்பந்தமானார். இன்றைய ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ஆண்டனி மிரட்டினார். குறிப்பாக ரியல் மாட்ரிட் தடுப்பாட்டத்தை தனது புத்திசாலிதனத்தினால் சுக்குநூறாக உடைத்தார். கிட்டதட்ட மெஸ்ஸி போல விளையாடியதாக பலரும் கூறி வருகிறார்கள்.

போட்டிக்குப் பிறகு 3 புள்ளிகளை பாக்கெட்டில் வைத்து எடுத்துசென்ற அவரது சைகையும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

summary

A Real Madrid-style retort..! Antony's gesture goes viral!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments