ஆம்பூர் அருகே கார் விபத்து : சென்னையைச் சேர்ந்த 4 பேர் பலி
ஆம்பூர் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த கார் விபத்தில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
ஆம்பூர் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த கார் விபத்தில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னை ஷெனாய் நகரை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் டாக்டர் குமாரசாமி (66). இவருடைய மனைவி லட்சுமி (60), மாமியார் கமலம்மாள் (80) ஆகிய மூவரும் பெங்களூர் சென்றுவிட்டு சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை சென்னையை சேர்ந்த கிருஷ்ணன் (30) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
ஆம்பூர் அருகே தோட்டாளம் கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பின் மீது மோதி ஆம்பூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த மினி லாரி மீது மோதியது.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் குமாரசாமி, டிரைவர் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். லட்சுமி மற்றும் கமலம்மாள் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.
விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.