கருணாநிதி மீதான அவதூறு வழக்குகள்: திரும்பப் பெறக் கோரி மனு
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது அதிமுக அரசு சார்பில் தொடரப்பட்டுள்ள 13 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது அதிமுக அரசு சார்பில் தொடரப்பட்டுள்ள 13 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த வழக்குரைஞர் குமரேசன் தாக்கல் செய்த மனுவில், மறைந்த அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மற்றும் அதிமுக அரசுக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பேசியதாக, கருணாநிதி மீது அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
2012-ஆம் ஆண்டு 7 வழக்குகள், 2013-ஆம் ஆண்டு 5 வழக்குகள், 2015-ஆம் ஆண்டு ஒரு வழக்கு என மொத்தம் 13 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
கருணாநிதி ஆக. 7-ஆம் தேதி காலமானார். எனவே, அவர் மீது தொடரப்பட்டுள்ள அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். இமம்மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக அரசு வழக்குரைஞர் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பித்து, விசாரணையை ஒத்திவைத்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.