FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாம்புகள் அழிவதைத் தடுக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு

உணவுச் சங்கிலியில் முக்கிய இடம் வகிக்கும் பாம்புகள் அழிந்து வருவதைத் தடுக்க அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

உணவுச் சங்கிலியில் முக்கிய இடம் வகிக்கும் பாம்புகள் அழிந்து வருவதைத் தடுக்க அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேலூர் அருகே உள்ள அமிரிதி வன உயிரின பூங்காவில் மான், முதலை, பாம்புகள், மயில், அரியவகை குரங்குகள், பறவையினங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 
மேலும், ஞாயிறுதோறும் சுற்றுலாப் பயணிகள் அமிரிதி மலைக் கிராமங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், மலையில் உள்ள இயற்கை நீருற்றுகள், தீர்த்த சுனைகள் உள்ளிட்டவையும் காண்பிக்கப்படுகின்றன. 
இதன்மூலம், அங்குள்ள மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலக மழைவாழ் மக்கள் தினம் அமிரிதி பூங்காவில் வியாழக்கிழமை கொண்டாடப் பட்டது. 
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், பாம்புகள் அழிவதைத் தடுக்க மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பாம்பு வந்தால் பிடித்து காட்டில் விடுவது குறித்து செயல்விளக்கமும் காண்பிக்கப்பட்டது. 
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, வனச்சரக அலுவலர் ராஜா பேசியதாவது: 
அமிரிதி வனப்பகுதியில் ஏராளமான பாம்புகள் உள்ளன. மக்கள் வாழும் பகுதிகளில் நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டு விரியன், சாரைப்பாம்பு ஆகியவை அதிக அளவில் உள்ளன. 
பெரிய ராஜநாகப் பாம்புகள் மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த காட்டில்தான் உள்ளன. சாரைப் பாம்புக்கு விஷம் கிடையாது. அதற்கு பயப்பட வேண்டியதில்லை. நாகப்பாம்பை அடித்தால் மற்றொரு பாம்பு பழிவாங்கும் என்பது மூடநம்பிக்கை. பாம்பை அடிக்கும்போது அதிலிருந்து வெளிவரும் மல வாடையில் மற்ற பாம்புகள் அந்த இடத்துக்கு வந்து செல்லும்.
பாம்புகள் ஊர்வன இனத்தைச் சேர்ந்தவை. உணவுச் சங்கிலியில் பாம்புகள் முக்கியமானவை, அவை உயிர் வாழ வேண்டும். எனவே, பாம்புகளைக் கண்டால் அடிக்க வேண்டாம். 
அவற்றைக் கண்டு ஒதுங்கிவிட்டால் அவை தானாகச் சென்றுவிடும். பாம்புகள் அழிவதைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments