FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2-வது நாளாக 142 அடியாக நிலை நிறுத்தம்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை இரண்டாவது நாளாக 142.20 அடியாக நிலைநிறுத்தம் செய்யப்பட்டது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:


முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை இரண்டாவது நாளாக 142.20 அடியாக நிலைநிறுத்தம் செய்யப்பட்டது.
அணையில் நீர் இருப்பு 7,720 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு விநாடிக்கு நீர்வரத்து 25, 733 கன அடியாகவும் இருந்தது. தமிழக பகுதிக்கு விநாடிக்கு 2,330 கன அடி திறந்து விடப்பட்டது. அதே நேரத்தில் அணைக்கு நீர் வரத்து அதிகம் இருந்ததால், 13 மதகுகளின் வழியாக இரண்டாவது நாளாக வல்லக்கடவு, வண்டிப்பெரியார் வழியாக 23 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பெரியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்க கேரள மாநிலத்தைச் சேர்ந்த குமுளி வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு: தேனி மாவட்ட தமிழக பகுதியான லோயர்கேம்ப் - குமுளி மலைப் பாதையில் புதன்கிழமை காலை இரச்சல்பாலம் அருகில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதனால் கம்பத்திலிருந்து குமுளி வழியாக கேரளத்துக்கு செல்லும் வாகனங்கள், கம்பம் - கம்பமெட்டு வழியாக திருப்பி விடப்பட்டன. குமுளி வழியாக கம்பம் வரும் வாகனங்களும் கம்பம்மெட்டு வழியாக தமிழக பகுதிக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் தொடர் மழையால் சாலையை பராமரிக்க முடியாமல் நெடுஞ்சாலைத் துறையினர் அவதிப்பட்டனர். 
இந்நிலையில், 2-வது நாளாக வியாழக்கிழமை, நெடுஞ்சாலைத்துறையினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments