திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வானது குறித்து கருத்து கூற ஒன்றுமில்லை: மு.க. அழகிரி
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வானது குறித்து கருத்து கூற ஒன்றுமில்லை என மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வானது குறித்து கருத்து கூற ஒன்றுமில்லை என மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
மு.க. அழகிரி வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்த உள்ளார். இதில் ஒரு லட்சம் பேர் வரை திரட்டிக் காட்டுவதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
திமுக தரப்பிடம் இருந்து சாதகமான சமிக்ஞைகள் இன்னும் கிடைக்காத நிலையில், தன்னிடம் தான் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் மு.க. அழகிரி இருக்கிறார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே செப்டம்பர் 5ஆம் தேதி பேரணி நடைபெறவுள்ளது என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வானது பற்றி கருத்து கூற ஒன்றுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.