பதாகைகள் வைப்பதை கழகத்தினர் முழுமையாகத் தவிர்த்திட வேண்டும்: ஸ்டாலின்
பதாகைகள் வைப்பதை கழகத்தினர் முழுமையாகத் தவிர்த்திட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: பதாகைகள் வைப்பதை கழகத்தினர் முழுமையாகத் தவிர்த்திட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அனுமதியில்லாமல் பேனர்கள் வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று சென்னைஉயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பதாகைகள் வைப்பதை கழகத்தினர் முழுமையாகத் தவிர்த்திட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுதொடர்பான செய்தியொன்றை 'ரீட்வீட்' செய்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது
.
வரவேற்கத்தக்க ஒன்று! பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக்கூடாது என நான் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். ஆனாலும், சில இடங்களில் வைக்கப்படுவதை அறிகிறேன், அதனை கழகத்தினர் முழுமையாக தவிர்த்திட வேண்டும். அது சட்டப்படியானது மட்டுமல்ல. பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் செயல்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.