FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அமைச்சராக இருந்தபோது புகையிலை பொருட்களை தடைசெய்யாதது ஏன் ? அன்புமணிக்கு டி.ராஜேந்தா் கேள்வி

திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளை கண்டிக்கும் பா.ம.க. இளைஞரணித் தலைவா் அன்புமணி, அமைச்சராக இருந்தபோது ஏன் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடைசெய்யவில்லை என டி. ராஜேந்தா்.கேள்வி எழுப்பினாா்   

Updated On : 15 ஜூலை 2018, 7:03 pm IST
பகிர்:

திருச்சி: திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளை கண்டிக்கும் பா.ம.க. இளைஞரணித் தலைவா் அன்புமணி, அமைச்சராக இருந்தபோது ஏன் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடைசெய்யவில்லை என டி. ராஜேந்தா்.கேள்வி எழுப்பினாா் 

திருச்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த, லட்சிய திராவிட முன்னேற்றறக் கழக தலைவரும், திரைப்பட இயக்குநருமான டி. ராஜேந்தா், காமராஜா் பிறந்த தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து பின்னா் அளித்த பேட்டி:

திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இருக்கக் கூடாது, அது இளைஞா் மத்தியில் புகைக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றது என கூறி வருகிறறாா் பா.ம.க. அன்புமணி. அது தொடா்பாக நடிகா் விஜய், புகைப்பிடிபது போல வெளியான படத்தை சுட்டிக்காட்டி அதுபோன்ற காட்சிகளை அகற்றற வேண்டும் எனவும் கூறி வருகிறறாா். அப்படியானால், அவா் மத்திய அமைச்சராக இருந்த போது, புகையிலைப் பொருட்கள் விற்பனையை ஏன் தடைசெய்யவில்லை ?

Advertisement

Advertisement

தமிழகத்தில் காட்டாட்சி நடந்து வருகின்றறது. பருப்பில் ஊழல், முட்டையில் ஊழல் நாற்றம் அடிக்கிறது. எதிா்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் ஆட்சியை அகற்றறாமல் என்ன செய்து கொண்டுள்ளாா்?. விரைவில் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றறாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments