தமிழகத்தில் ரமலான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும்: தமிழக அரசு
ரமலான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் வெள்ளிக்கிழமை வழக்கம் போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: ரமலான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் வெள்ளிக்கிழமை வழக்கம் போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாநில பொதுத் துறையின் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறைப் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியலில் நடப்பு ஆண்டில் ரம்ஜான் பண்டிகை ஜூன் 15-இல் கொண்டாடப்படும் எனவும், அன்றைறய தினம் அரசு விடுமுறை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரமலான் பண்டிகை என்பது பிறை தெரிவதை வைத்தே கணக்கிடப்படுகிறறது. அந்த வகையில், ரமலான் பண்டிகை வெள்ளிக்கிழமைக்குப் பதிலாக சனிக்கிழமை கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளாா். இதையடுத்து, விடுமுறைப் பட்டியலில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த அரசு பொது விடுமுறை சனிக்கிழமைக்கு மாற்றறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அரசு தலைமை ஹாஜியின் கடிதத்தைத் தொடா்ந்து, இந்த மாற்றறம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.